மதுவால் மரண ஓவியம்

மதுவால் மரண ஓவியம் அழகான ஒரு ஊரில் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன ஒரு காதல் ஜோடி. மிகவும் அழகான வாழ்க்கை. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ஆனால் குழந்தை இல்லை. நாள்கள் செல்ல செல்ல குழந்தை இல்லை என்று குறை சொல்ல தெடங்கினர் . மனம் உடைந்து போன இருவரும் கோயில் குளம் செல்லாத நாள் இல்லை. வருடம் ஐந்து ஆகியது ஒரு பலனும் இல்லை. மனம் உடைந்து போன கணவன் சோகத்தை தீர்க்க குடி பழக்கத்தை தெடங்கினான் . கணவன் குடிப்பது பாத்த மனைவி அதிகமாக மனம் வருந்தி அழுது கொண்டே வாழ்க்கையை நடத்தி வந்தாள் . கணவன் குடித்து குடித்து சாலை ஓரங்களில் விழுந்து கிடக்கும் நிலை. அக்கம் பக்கம் வீட்டில் சண்டை. போதைக்கு அடிமையான நிலை அவன் வாழ்வையும் மாற்றி விட்டது. இத்தனை சோகத்தையும் தாண்டி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் மாலை நேரத்தில் கணவன் மது அருந்திவிட்டு வீடு வந்து பார்த்தால் மனைவி வயிற்றுவலியால் துடிப்பதை பார்த்தவுடன் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றான். அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது இருந்தது. மருத...