மதுவால் மரண ஓவியம்

முற்பகல் பிற்பகல்
ஒரே ஊரில் பிறந்த இரண்டு தோழிகள் பச்சை அம்மாள்,நீலவாணி இருவருக்கும் திருமணம் ஆகாவில்லை.
ஊரில் ஒரு அழகான நெல்லிக்காய் மரம் அதில் அழகான ஊஞ்சல் இருவரும் பொழுது போவதுக்கூடத் தெரியாமல் விளையாடுவது வழக்கம்.
அப்போது இருவருக்கும் வீட்டில் திருமண ஆலோசனை நடத்தினார் சிறிது காலம் கழித்து இருவருக்கும் திருமணம் செய்து வேறு வேறு ஊருக்கு சென்று குடும்ப வாழ்க்கையை தொடங்கினார்.
ஆனால் இருவருக்கும் எப்போதும் அவர்களின் நினைவுகள் திரும்ப பார்க்க வேண்டும் என்று மனதில் ஓடியது.
அப்போது நீல தான் தோழியை பார்க்க ஊருக்கு வரும்போது தன் தாய் வீட்டில் சென்றபோது தான் தோழி பச்சை தாய் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.
பச்சை திருமணம் முடிந்த சில நாட்கள் கழித்து கணவன் இறந்து போனதால் அம்மா வீட்டில் உடல் நலம் இல்லாமல் இருப்பது தெரிந்ததும் அவளைப் பார்க்க ஓடினாள்.
அங்கு சென்று பார்த்தால் தான் தோழி சுயநினைவு இல்லாமல் மரணப்படுக்கையில் இருப்பது பார்த்தும் தன்னை அறியாமல் அழுதுகொண்டே பேசத் தொடங்கினாள்.
தன் மனதில் இருந்த கவலைகளை தான் தோழியால் கேட்டு புரிந்து கொள்ள முடியாத நிலையை புரிந்தும் பேசத் தொடங்கினாள்
நீல அழுதுகொண்டே என் கணவன் ஒரு திருடன் இப்போது சிறையில் இருக்கிறார்.இரு நாட்கள் கழித்து வீட்டில் வருவர் அதற்கு முன்னர் உன்னை பார்க்க வேண்டும் என்று வந்தால் நி என்னை விட்டு பிரிந்து செல்லும் நிலையில் உள்ளாய்.
என்னை என் கணவன் நிம்மதியாக வாழ விடவில்லை.
நீ எனக்கு ஒன்று செய்ய வேண்டும்
நீ இறந்து விட்டால் சொர்க்கம் போனால் அங்கு நமக்காக ஒரு நெல்லிக்காய் மரம் அதில் அழகான ஊஞ்சல் அமைத்து வைத்து விட்டு என்னிடம் வந்து செல்லவேண்டும் நான் இறந்து உன்னுடன் வருவேன் அங்கு நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்று கூறி முடித்ததும் பச்சை யின் உயிர் பிரிந்தது.
நீல சோகத்தில் தான் கணவன் வீட்டுக்கு சென்று விட்டாள் .
தன் இறந்துபோன தோழி வருவாள் என்று நினைத்து கொண்டு காத்து இருந்தாள்.
ஆனால் வரவில்லை.
கொஞ்சம் நாள் சென்றது .
அப்போது மனைவி வெளியே செல்வதை பார்த்து இன்று தான் மனைவியை கொலைச் செய்யவேண்டும் என்று மனதில் இருந்த திட்டங்கள் அனைத்தும் தான் நன்பனிடம் கூறியபடி.
மது போதையில் கணவன் கூறியது
தன் மனைவி வீட்டில் வந்தவுடன் கதவை திறப்பாள் அப்போது தாழ்ப்பாளில் நான் கொடுத்த மின்சாரம் அவளைத் தாக்கி இறந்து விடுவாள்.
நன்பன் : ஒரு வேளை மின்சாரம் தடைபட்டால்?
அவள் எப்படியும் அறையில் சென்று ஓய்வு எடுப்பாள் அங்கே மின்விசிறி மீது பெரிய கல்லை எடுத்து வைத்து விட்டேன் மின்விசிறி இயங்கும் போது கல் தலையில் விழுந்தது விடும்.
நன்பன் : மின்விசிறி இயங்கவில்லை என்றால்?
இதற்காக வீட்டில் குடிக்கும் நீரில் விஷம் கலந்த வைத்து விட்டேன்.
இதை அனைத்து கேட்டு விட்ட இறந்து போன தோழி
ஆவியாக.
தன் தோழியை காப்பாற்ற வேண்டும் என்று அவள் முன்னால் தோன்றினாள்.
இறந்து போன தோழி ஆவியாக வந்ததைப் பார்த்து மகிழ்ந்தாள் தன்னை அழைத்து சென்று விடுவாள் என்று .
ஆனால் இறந்து போன தோழி ஆவியாக வந்த காரணம் தான் தோழியை காப்பாற்ற.
தான் பார்த்து கேட்ட அனைத்தும் கூறி காப்பாற்ற நினைத்தால் தோழி என்னை கொன்றாலும் போதூம் உன்னோடு சேர்ந்து வருவேன் என்று மனதில் மகிழ்ச்சி.
அப்போது இறந்து போன தோழி தடுத்தும் கேக்காமல் கதவை திறந்தாள் ஆனால் ஒன்று ஆகவில்லை. காரணம் மின்சாரம் இல்லை.
விசம் கலந்த தண்ணீரை குடிக்க முயன்றபோது இறந்து போன தோழி தண்ணீரை தட்டி விட்டாள்.
இனி இருப்பது ஒரு வாய்ப்பு மின்விசிறி போட்டு விட்டு தான் தூங்க தொடங்க்கினாள் .
குடி போதையில் வந்த கணவன் மனைவி அடித்து விட்டு போதையில் மின்விசிறி இந்த அறையில் தூங்கினான்.
திடிர் என்று மின்சாரம் வந்தது மின்விசிறி இயங்கியது அந்த கல் தலையில் விழுந்தது கணவன் இறந்து விட்டார்.....
அப்போது இறந்து போன தோழி ஆவியாக வந்து தான் தோழியை பார்த்து நி இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்று கூறி மறைந்து போனாள்..
பிறர்க்கு தீங்கு நினைத்தால் அது நமக்கு
திரும்ப வரும்.
Comments
Post a Comment